follow the truth

follow the truth

January, 16, 2025
Homeஉள்நாடுநாட்டில் என்ன நடக்கிறது என்பது மக்களுக்கு தெரியும் - எதிர்க்கட்சித் தலைவர்

நாட்டில் என்ன நடக்கிறது என்பது மக்களுக்கு தெரியும் – எதிர்க்கட்சித் தலைவர்

Published on

நாட்டில் என்ன நடக்கிறது என்பதை மக்கள் நன்கு அறிவார்கள் எனவும், அவ்வாறு உண்மையை அறிந்த மக்களை யாராலும் ஏமாற்ற முடியாது எனவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

அரசாங்கம் ஆட்சிக்கு வந்தவுடனயே பணக்காரர்களுக்கு வரிச்சலுகை அளிப்பதை காரணமாகக் கொண்டு, அரச வருமானம் வீழ்ச்சியடைந்துள்ளதாக தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர், தற்போதைய டொலர் தட்டுப்பாட்டுக்கு அதுவும் ஒரு காரணம் எனவும் தெரிவித்தார்.

எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று (01) திஸ்ஸமஹாராம ரன்மினிதென்னவிற்கு விஐயம் செய்து பாற்பண்ணையாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாடினார்.

அம்மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவருடன் நீண்ட நேரம் கலந்துரையாடினர்.

நாட்டின் பிரச்சினைகளுக்கு எதிர்க்கட்சியே பிரதான காரணம் என ஜனாதிபதியும் பிரதமரும் அண்மையில் கூறினர். அவ்வாறானால் சஜித் பிரேமதாசவும், ஐக்கிய மக்கள் சக்தியும் தான் எல்லா தவறுகளையும் செய்துள்ளனர். தடுப்பூசி கொண்டு வர வேண்டாம் என்று ஆற்றில் முட்டிகளை வீசியவர்கள் நாங்கள் தான். அவர்கள் கூறுவது போல தடுப்பூசிக்கு பதிலாக பானிகளை குடிக்கும் யோசனையை நாங்கள் தானே பிரபலப்படுத்தினோம், அரசாங்கம் பிரபலப்படுத்தவே இல்லையே!. கொரோனா பரிசோதனை கருவிகள் மூலம் நாங்கள் தானே சுரண்டினோம். அரசாங்கம் சுரண்டவே இல்லையே!.எரிவாயு வரிசை,வெடிக்கும் எரிவாயு சிலிண்டர்கள் மற்றும் அவசர அவசரமாக இயற்கை விவசாயத்தை அறிமுகப்படுத்தி விவசாயத்தையும் அழித்தவர் சஜித் பிரேமதாச தானே,இந்த அரசாங்கம் அல்லவே.சீனி, பூண்டு, தேங்காய் எண்ணெய் உள்ளிட்ட அனைத்து மோசடிகளையும் செய்துள்ளது சஜித் பிரேமதாசவும், ஐக்கிய மக்கள் சக்தியும் தானே, இந்த அரசாங்கம் அவ்வாறு ஒன்றையும் செய்யவே இல்லையே!. இந்த அரசாங்கம் அனைத்தையும் சிறப்பாகவே செய்துள்ளது.

இந்த எண்ணெய் பிரச்சினை, டொலர் பிரச்சினைக்கு சர்வதேச சமூகத்துடன் இணக்கமாக பேசி தீர்வு காணலாம். கொரோனா காலப்பிரிவில், எதிர்க்கட்சியான நாங்கள் “மூச்சு” மற்றும் “பிரபஞ்சம்” என்ற பெயரில் இரண்டு வேலைத்திட்டங்களைத் தொடங்கினோம்.மூச்சுத் திட்டத்திற்காக சீன அரசாங்கம் 200 இலட்சம் ரூபாவை நன்கொடையாக வழங்கியது. கடன் அல்ல. நன்கொடை. நாங்கள் கடன் வாங்க தயாராக இல்லை. எதிர்க்கட்சி என்ற வகையில், சர்வதேச சமூகத்துடன் உறவுகளை கையாண்டு உதவி பெற முடியுமானால், ஆட்சி அதிகாரத்துடன் நாடு வீழ்ந்துள்ள இடத்திலிருந்து நாட்டை மீள நாங்கள் கட்டியெழுப்புவோம் என மேலும் அவர் தெரிவித்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

எதிர்காலத்தில் இலங்கையுடன் தொடர்ந்து ஒத்துழைக்கத் தயார் – சீன ஜனாதிபதி

சீனாவிற்கு நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிற்கும் சீன ஜனாதிபதி சீ ஜின்பிங்விற்கும்...

பாடசாலை மாணவியை கடத்திய சந்தேக நபர்கள் ஜனவரி 27 வரை விளக்கமறியலில்

கடந்த 11 ஆம் திகதி கம்பளை, தவுலகல பகுதியில் பாடசாலை மாணவியை கடத்திச் சென்ற சம்பவத்தின் சந்தேக நபர்கள்...

14 நாட்களில் 2,352 டெங்கு நோயாளர்கள் பதிவு

நாட்டில் இவ்வருடத்தின் ஜனவரி மாதத்தின் முதல் 14 நாட்களில் 2,352 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தேசிய டெங்கு...