மனித உரிமைகளை ஊக்குவித்து, பாதுகாப்பதனை உணர்ந்து கொள்வதற்கான பலதரப்புக் கட்டமைப்பில் இலங்கை ஒரு செயலூக்கமான பங்கேற்பாளராக உள்ளது என வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.
ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 49வது அமர்வில் உரையாற்றியபோதே வெளிவிவகார அமைச்சர் இதனை தெரிவித்தார்.
ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 49 ஆவது கூட்டத்தொடருக்கான இலங்கை பிரதிநிதிகள் குழுவுக்கு வௌிவிவகார அமைச்சர், பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் தலைமை தாங்குகின்றார்.