2021ஆம் ஆண்டு மற்றும் 2022 ஆம் ஆண்டுக்கான பெரும் போகத்தில் நெல் அறுவடை குறைவினால் விவசாயிகள் பலர் பாதிக்கப்பட்டிருந்தனர்.
இந்நிலையில், விவசாயிகளின் வருமான மட்டத்தைப் பாதுகாப்பதற்காக ஒரு கிலோ நெல்லுக்கு ரூபா 25 வீதம் இழப்பீடு வழங்குவதற்கு பொருத்தமான முறையொன்றை உருவாக்க அமைச்சரவை முன்னதாக அங்கீகாரம் வழங்கியிருந்தது.
இந்நிலையில், அந்த முறையை நடைமுறைப்படுத்த, தேவையான நிதியை பெற்றுக்கொள்ளவும், உர உற்பத்தியை ஊக்குவிக்கவும், விநியோக ஒழுங்குமுறை மற்றும் நெல், தானியங்கள், காய்கறிகள், பழங்கள் போன்றவற்றை பயிரிடவும் விவசாய அமைச்சு முன்மொழிந்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.