இலங்கைக்கு வருகை தந்துள்ள உக்ரைன் சுற்றுலா பயணிகளுக்கான விசா காலத்தை நீடிப்பது தொடர்பில் இலங்கை அரசாங்கம் அவதானம் செலுத்தியுள்ள யோசனையை இன்று நடைபெறவுள்ள அமைச்சரவைக் கூட்டத்தில் சமர்பிக்கவுள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக வெளிவிவகார அமைச்சு, குடிவரவு குடியகல்வு திணைக்களத்துடன் கலந்துரையாடி வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சுற்றுலாப் பயணிகளுக்கான விசாக்கள் குறைந்தது ஒரு மாத காலத்திற்கு வழங்கப்படுவதால், தற்போது நாட்டில் தங்கியுள்ள உக்ரேனியர்களுக்கான வீசா காலாவதியாகும் திகதியை கருத்தில் கொண்டு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள எதிர்பார்ப்பதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் கூற்றுப்படி, தற்போது இலங்கையில் சுமார் 4 ஆயிரம் உக்ரேனிய சுற்றுலாப் பயணிகளும், சுமார் 11 ஆயிரத்து 500 ரஷ்ய சுற்றுலாப் பயணிகளும் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.