உக்ரைன் – பெலாரஸ் எல்லையில் எந்த முன்நிபந்தனையும் இன்றி ரஷ்ய தரப்பிடம் உக்ரைன் பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ளும் என யுக்ரேன் அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.
பெலாரஸ் அதிபர் அலெக்சாண்டர் லுகாஷென்கோவை சந்தித்த பிறகு வெளியிட்டுள்ள அறிக்கையில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.
உக்ரேனிய அதிகாரிகள் பேச்சுவார்த்தைக்கு வரும்போது பெலாரஸ் பிராந்தியத்தில் நிறுத்தப்பட்டுள்ள அனைத்து விமானங்கள், ஹெலிகாப்டர்கள் மற்றும் ஏவுகணைகள் என எதுவும் பயன்படுத்தப்படமாட்டாது என லுகாஷென்கோ உறுதியளித்துள்ளார் என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதுவரை பேச்சுவார்த்தை குறித்து ரஷ்யாவோ அல்லது பெலாரசோ எந்த அறிக்கையும் விடுக்கவில்லை