உக்ரேன் மீதான படையெடுப்பினால் ரஷ்யப் படைகள் சுமார் 4,300 பேர் உயிரிழந்துள்ளதாக உக்ரேன் துணை பாதுகாப்பு அமைச்சர் ஹன்னா மல்யார் தெரிவித்துள்ளார்.
உக்ரேனின் துணை பாதுகாப்பு அமைச்சர் ஹன்னா மல்யார், உக்ரேனால் ரஷ்யாவிற்கு ஏற்பட்ட இழப்புகளின் மதிப்பீட்டை தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
படையெடுப்பின் முதல் 3 நாட்களுக்கான ஆரம்பக்கட்ட கணக்கெடுப்பு மாறுதலுக்கு உட்பட்டது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் ரஷ்யாவிடம் இருந்து இறந்தவர்களின் எண்ணிக்கை பற்றிய தகவல்கள் வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
4,300 உயிர் இறப்புகள்
27 விமானங்கள்
26 ஹெலிகாப்டர்கள்
146 தொட்டிகள்
706 கவச போர் வாகனங்கள்
49 பீரங்கிகள்
1 பக் வான் பாதுகாப்பு அமைப்பு
4 கிரேட் மல்டிபிள் ராக்கெட் ஏவுதள அமைப்புகள் (Grad multiple rocket launch systems 30 வாகனங்கள்
60 டேங்கர்கள்
2 ட்ரோன்கள்
2 படகுகள்