நாளை (28) முதல் பஸ் சேவைகள் மட்டுப்படுத்தப்படும் என தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
எரிபொருள் கிடைக்காததாலும், எரிபொருள் நிரப்பும் நிலையங்களில் நீண்ட வரிசையில் காத்திருக்க நேர்ந்துள்ளதாலும் இவ்வாறு பஸ் சேவைகள் மட்டுப்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.
நாளை முதல் அமுலுக்கு வரும் வகையில் இலங்கையில் உள்ள அனைத்து தனியார் பேருந்துகளும் நாளொன்றுக்கு சேவையில் ஈடுபட வேண்டிய எண்ணிக்கையில் 50 வீதமாக குறைக்கப்படும் என இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன கூறியுள்ளார்.