follow the truth

follow the truth

January, 15, 2025
Homeஉள்நாடுஇலங்கைக்கும் பிரான்சுக்கும் இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம்

இலங்கைக்கும் பிரான்சுக்கும் இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம்

Published on

பாரிஸ் வர்த்தகம் மற்றும் பொருளாதார ஈர்ப்பிற்கான அமைச்சர் ஃபிராங்க் ரெய்ஸ்டரை (Franck Reister ) வெளிநாட்டு அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ், பரிஸில் உள்ள வெளிநாட்டு அமைச்சில் சந்தித்துள்ளார்.

இதன்போது பல்வேறு துறைகளில் இலங்கையுடனான பொருளாதார உறவுகளை விரிவுபடுத்துவதற்கான பிரான்ஸின் ஆதரவு குறித்து கலந்துரையாடினார்.

இரு அமைச்சர்களினதும் கலந்துரையாடலின் முடிவில் அவர்களுக்கு இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தமொன்று கைச்சாத்திடப்பட்டதாக வெளிநாட்டு அமைச்சு தெரிவித்துள்ளது.

வெளிநாட்டு அமைச்சர் பிரான்ஸின் வர்த்தக சபையில் பல கூட்டங்களில் கலந்து கொண்டார். ஆலோசகர் பெர்னார்ட் குயின்ட் மற்றும் சர்வதேச வணிக வலையமைப்புக்களின் தலைவர் எஸ்டெல் கில்லட் ஆகியோரை அவர் வணிக சபையில் வைத்து சந்தித்தார்.

இந்தக் கலந்துரையாடலின் போது, பிரான்ஸ் மற்றும் இலங்கை நிறுவனங்களுக்கு இடையேயான வலையமைப்பு ஏற்பாடுகள் மற்றும் தொழில்முனைவு, வணிக முகாமைத்துவம் மற்றும் சம்பந்தப்பட்ட விடயங்களில் கல்வித் திட்டங்களுக்கான பிரான்ஸின் நிபுணத்துவம் ஆகியன தொடர்பில் குறிப்பாக கவனம் செலுத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றன.

பிரான்ஸில் உள்ள நிறுவனங்களின் மிகப்பெரிய சங்கமான எம்.ஈ.டி.ஈ.எப். இன்டர்நெஷனலின் திரு. ஃபிராங்கோயிஸ் கார்பினுடன் பேராசிரியர் பீரிஸ் கலந்துரையாடினார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இந்த ஆண்டு மதுபானசாலைகள் 18 நாட்களுக்கு மூடப்படும்

2025 ஆம் ஆண்டில் மதுபானசாலைகள் மூடப்பட வேண்டிய திகதிகள் குறித்து கலால் திணைக்களம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த ஆண்டு...

மல்வத்து ஓயாவின் நீர்மட்டம் அதிகரிப்பு – வெள்ள அபாய எச்சரிக்கை

மல்வத்து ஓயாவின் தாழ்நிலப்பகுதிகளில் சிறிய அளவான வெள்ளம் ஏற்பட வாய்ப்புள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது. வெங்கலச்செட்டிக்குளம், மடு, முசலி, நானாட்டான்...

இரவு நேரங்களில் சீகிரியா திறக்கப்படமாட்டாது

வரலாற்று சிறப்புமிக்க சீகிரியாவை இரவு நேரங்களில் சுற்றுலாப் பயணிகளுக்காகத் திறப்பது குறித்த செய்திகளை புத்தசாசன, மத மற்றும் கலாசார...