மேல் மாகாணத்தில் மேற்கொள்ளப்பட்ட விசேட பொலிஸ் நடவடிக்கையின் போது 1,084 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நேற்று(26) காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை இந்த சிறப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களில் 34 சந்தேக நபர்கள் பல்வேறு குற்றங்களுக்காகவும், 352 பேர் ஊழல் தடுப்புக் குற்றங்களுக்காகவும் எனவும் 556 சந்தேக நபர்கள் நீதிமன்றத்தினால் பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டவர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.