இலங்கைக்கு வருகைதரும் பூரணமாக தடுப்பூசி செலுத்திக்கொண்ட வெளிநாட்டு பயணிகள் பிசிஆர் அல்லது அன்டிஜன் பரிசோதனை செய்து கொள்ள தேவையில்லை என தெரிவிக்கப்படுகின்றது.
எதிர்வரும் மார்ச் முதலாம் திகதி முதல் இந்த நடைமுறை அமுலுக்கு வரவுள்ளதாக சிவில் விமான சேவைகள் அதிகாரசபையின் தலைவர் தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும் நாட்டுக்கு வருவதற்கு இரண்டு வாரங்களுக்கு முன்னர் முழுமையான தடுப்பூசி பெற்றவர்களுக்கு இந்த அனுமதி வழங்கப்படுவதோடு தடுப்பூசி செலுத்தப்பட்டமைக்கான அட்டையை உடன் வைத்திருத்தல் அவசியமெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.