சதொச நிறுவனத்தின் ஊடாக விளையாட்டு பொருட்களை இறக்குமதி செய்து, அதனை விளையாட்டு சங்கங்களுக்கு பகிர்ந்தளித்தமை தொடர்பில் அமைச்சர் மகிந்தானந்த அளுத்கமகே உள்ளிட்ட இருவருக்கு எதிரான வழக்கை தொடர்ந்தும் முன்னெடுத்து செல்லவுள்ளதாக கையூட்டல் ஆணைக்குழு இன்று அறிவித்துள்ளது.
இது தொடர்பான வழக்கு கொழும்பு மூவரடங்கிய மேல் நீதிமன்றில் இன்றைய தினம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே, கையூட்டல் ஆணைக்குழு இந்த விடயத்தை நீதிமன்றுக்கு அறிவித்துள்ளது.
சதொச நிறுவனத்தின் ஊடாக விளையாட்டு பொருட்களை இறக்குமதி செய்து, அதனை விளையாட்டு சங்கங்களுக்கு பகிர்ந்தளித்தமை ஊடாக அரசாங்கத்திற்கு 53 மில்லியன் ரூபா நட்டம் ஏற்பட்டதாக அமைச்சர் மகிந்தானந்த அளுத்கமகே மற்றும் சதொச நிறுவனத்தின் முன்னாள் தலைவர் நலின் பெர்னாண்டோ ஆகியோருக்கு எதிராக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.