follow the truth

follow the truth

November, 13, 2024
HomeTOP1செர்னோபிள் அணு உலையை கைப்பற்றியது ரஷ்யா

செர்னோபிள் அணு உலையை கைப்பற்றியது ரஷ்யா

Published on

உக்ரேன் இன்று இரண்டாவது நாளாக ரஷ்யாவின் இராணுவ தாக்குதலுக்கு உள்ளானது. இந்தநிலையில், செர்னோபிள் அணு விபத்துத் தளத்தை ரஷ்ய இகைப்பற்றியதாக, உக்ரேன் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதனை “முற்றிலும் அர்த்தமற்ற தாக்குதல்” என கூறியுள்ள உக்ரேன் ஜனாதிபதியின் ஆலோசகர் மிக்கைலோ பொடாலியாக், “இன்று ஐரோப்பாவில் நிகழும் தீவிரமான அச்சுறுத்தல்களில் ஒன்று” என தெரிவித்துள்ளார்.

செர்னோபிள் அணு உலையில் 1986ம் ஆண்டு நிகழ்ந்த விபத்து, மனித வரலாற்றில் பெரும் பொருட்சேதம் மற்றும் உயிரிழப்புகளை ஏற்படுத்திய மோசமான அணு விபத்தாகும்.

செர்னோபிள் அணு விபத்துத் தளத்தை ரஷ்ய ராணுவம் கைப்பற்றியுள்ள நிலையில், ரஷ்யா படையெடுப்பை தொடர்ந்தால், அத்தகைய பேரழிவு மீண்டும் நடக்கும் என, உக்ரேன் ஜனாதிபதி எச்சரித்துள்ளார்.

செர்னோபிள் அணு விபத்துத் தளத்தில், “மற்றுமொரு சூழலியல் பேரழிவு” நிகழ்வதன் சாத்தியம் குறித்து, உக்ரேன் வெளியுறவு துறை அமைச்சகமும் எச்சரித்துள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

பத்தாவது பாராளுமன்றத்தின் முதலாவது அமர்வு இம்மாதம் 21 ஆம் திகதி

பத்தாவது பாராளுமன்றத்தின் முதலாவது அமர்வு இம்மாதம் 21 ஆம் திகதி இடம்பெறவுள்ளது. அரசியலமைப்பின் 70 ஆம் உறுப்புரையின் பிரகாரம் ஜனாதிபதி...

தேர்தல் பணிகளுக்கு வருகை கட்டாயம் : நியமிக்கப்பட்ட அரச அதிகாரிகளுக்கு அறிவிப்பு

தேர்தல் கடமைகளுக்காக நியமிக்கப்பட்டுள்ள அனைத்து அதிகாரிகளும் அந்த நியமனங்களை மாற்றவோ அல்லது இரத்து செய்யவோ முடியாது எனவும், தேர்தல்...

அமைதியாக நடந்து கொள்ளுமாறு தேர்தல் ஆணைக்குழு அறிவிப்பு

எதிர்வரும் நாட்களில் பாராளுமன்ற தேர்தல் தொடர்பில் மக்கள் அமைதியாக நடந்து கொள்ளுமாறு தேர்தல்கள் ஆணைக்குழு வேண்டுகோள் விடுத்துள்ளது. அரசாங்க தகவல்...