இந்தோனேஷியாவின் சுமத்ரா தீவில் இன்று காலை சுமார் 8.30 மணியளவில் 6.2 ரிச்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
சுமத்ரா தீவின் வடக்கே நிலநடுக்கம் ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது. அது 10 கிலோமீற்றர் ஆழத்திலிருந்து தொடங்கியதாகக் கூறப்படுகிறது.
நிலநடுக்கம் நிலத்தின் அடியில் ஏற்பட்டதால் சுனாமிப் பேரலை எச்சரிக்கையை விடுக்கவில்லை என இந்தோனேஷிய நிலவியல் ஆய்வு அமைப்பான BMKG தெரிவித்துள்ளது.