உக்ரேனில் நிலவும் நிலைமையைக் கருத்தில் கொண்டு, உக்ரேனில் எஞ்சியுள்ள இலங்கைப் பிரஜைகளைப் பாதுகாப்பாக ஒருங்கிணைப்பதற்கு உரிய நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு கிய்வ்க்கு ஒரே நேரத்தில் அங்கீகாரம் பெற்றுள்ள அங்காராவில் உள்ள இலங்கைத் தூதரகத்திற்கு வெளிநாட்டு அமைச்சு அறிவுறுத்தியுள்ளது.
உக்ரேனில் உள்ள இலங்கைப் பிரஜைகள் இது தொடர்பாக அங்காராவில் உள்ள இலங்கைத் தூதரகத்தில் நிறுவப்பட்டுள்ள 24×7 அவசர தொலைபேசி இலக்கமான +90 534 456 94 98, நிலையான தொலைபேசி இலக்கமான +90 312 427 10 32 மற்றும் மின்னஞ்சல் முகவரியான slemb.ankara@mfa.gov.lk ஆகியவற்றில் தொடர்பு கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.