ரஷ்யாவின் அழைப்பை ஏற்று இரு நாள் பயணமாக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் அந்நாட்டுக்கு விஜயம் மேற்கொண்டுள்ளார்.
தலைநகர் மாஸ்கோவில் அந்நாட்டு ஜனாதிபதி விளாடிமிர் புடினை சந்தித்து பேசியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன. இந்த சந்திப்பின் போது இருதரப்பு நலன் சார்ந்த முக்கிய விவகாரங்கள் குறித்து ஆலோசித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
உக்ரைன் மீது ரஷ்யா போரை ஆரம்பித்துள்ள நிலையில் , அமெரிக்கா, மற்றும் ஐரோப்பிய நாடுகளின் கடும் கண்டனத்திற்கிடையே ரஷ்ய அதிபரை பாகிஸ்தான் பிரதமர் சந்தித்து பேசியுள்ளமை குறிப்பிடத்தக்கது.