உக்ரைன் மீது போர் தொடுக்க ரஷ்ய ஜனாதிபதி விளாதிமிர் புட்டின் உத்தரவிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அதன்படி, உக்ரைன் எல்லையில் 2 லட்சம் ரஷ்யத் துருப்புகள் குவிக்கப்பட்டுள்ளதாக வௌிநாட்டு ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.
இதேவேளை, நேற்றிரவு (23) ரஷ்ய ஜனாதிபதியுடன் பேச்சுவார்த்தை நடத்த முயற்சித்து தோல்வியடைந்ததாக உக்ரைன் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
இதேவேளை, ரஷ்யா போர்நிறுத்தத்தை அறிவிக்க வேண்டும் ஐ.நா. பொதுச்செயலாளர் வேண்டுகோள் விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலும், புட்டின் இந்த அதிரடி உத்தரவை அடுத்து ஐ.நா.பாதுகாப்பு கவுன்சில் அவசரக் கூட்டம் நடைபெற்று வருவதாக வௌிநாட்டு ஊடகங்கள் மேலும் தெரிவித்துள்ளன.