ஹொங்கொங் சகல பிரஜைகளுக்கும் கொவிட் பரிசோதனைகளை 3 முறை முன்னெடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் மார்ச் மாதம் நடுப்பகுதியிலிருந்து அனைவரும் 03 கட்ட கொரோனா பரிசோதனைகளை மேற்கொண்டிருக்க வேண்டுமென ஹொங்கொங் நிர்வாகத் தலைவர் கெரி லேம் தெரிவித்துள்ளார்.
வைத்தியசாலைகளில் கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் அதிகளவில் அனுமதிக்கப்படும் நிலையில் புதிய கட்டுப்பாடுகள் அறிவிக்கப்படுவதாகவும், கட்டாய பரிசோதனை மேற்கொள்ளப்பட வேண்டுமெனவும், அதன் ஊடாகவே கொவிட் -19 வைரஸ் தாக்கத்தை கட்டுப்படுத்த முடியுமெனவும் அவர் அறிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், மிக வேகமாக பரவக்கூடிய ஒமெக்ரோன் தொற்றினால் அந்நாட்டின் வைத்தியசாலை கட்டமைப்புகளும் தனிமைப்படுத்தலுக்கான வசதிகளும் பாதிப்படைந்துள்ளன.