மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் இரண்டாம் கட்டம் (அதுகல்புர நுழைவாயில்) திறந்து வைக்கப்பட்ட முதல் மாதத்தில், அரசாங்கம் 100 மில்லியனுக்கும் அதிகமான வருமானத்தை ஈட்டியுள்ளதாக அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்தார்.
கடந்த ஜனவரி 16 ஆம் திகதி முதல் நேற்று(21) வரையான காலப்பகுதியில் 510,670 வாகனங்கள் இவ்வீதியில் பயணித்துள்ளதாகவும் அந்த வாகனங்கள் மூலம் 100 மில்லியன் ரூபா வருமானம் ஈட்ட முடிந்துள்ளதாகவும் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ மேலும் தெரிவித்துள்ளார்.