சுகாதாரத் துறை ஊழியர்கள் எதிர்வரும் மார்ச் 2 ஆம் திகதி முதல் மீண்டும் வேலை நிறுத்த போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக சுகாதார நிபுணர்கள் கூட்டமைப்பின் தலைவர் ரவி குமுதேஷ் தெரிவித்துள்ளார்.
சுகாதார நிபுணர்களுடன் செய்து கொள்ளப்பட்ட உடன்படிக்கைகள் எதுவும் நிறைவேற்றப்படவில்லை எனவும், இந்நிலையில், மீண்டும் பணிப்புறக்கணிபபு போராட்டத்தை முன்னெடுக்க சுகாதார நிபுணர்கள் சம்மேளனத்தின் நிர்வாக சபை ஏகமனதாக தீர்மானித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.