follow the truth

follow the truth

January, 16, 2025
Homeஉள்நாடுடுபாய் எக்ஸ்போ கண்காட்சியில் இலங்கையின் விலைமதிப்பான 25 இரத்தினக்கற்கள்

டுபாய் எக்ஸ்போ கண்காட்சியில் இலங்கையின் விலைமதிப்பான 25 இரத்தினக்கற்கள்

Published on

பெப்ரவரி 26ஆம் திகதி துபாய் எக்ஸ்போ கண்காட்சியின் இலங்கை கண்காட்சி கூடம் சஃபாயர் தினத்தை முன்னிட்டு ஒதுக்கப்படுவதுடன், அங்கு இந்நாட்டின் பிரதான இரத்தினக்கல் மற்றும் ஆபரண வர்த்தகர்கள் 11 பேர் மிகவும் மதிப்புமிக்க 25 இரத்தினக்கற்கள் இதன்போது காட்சிப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர்.

டுபாய் எக்ஸ்போ கண்காட்சியில் எதிர்வரும் 26ஆம் திகதி நடைபெறவுள்ள சபாயர் தினம் (Sapphire Day – மாணிக்க தினம்) தொடர்பில் விளக்கமளிப்பதற்கு இரத்தினக்கல் மற்றும் ஆபரணச் சங்கத்தின் பிரதிநிதிகள் நேற்று (22) அலரி மாளிகையில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்தனர்.

இலங்கையின் நீல இரத்தினக்கற்களுக்கு (Blue Sapphires) காணப்படும் உலகளாவிய கேள்வியை கருத்திற்கொண்டு நீல இரத்தினக்கற்களுடன் சுற்றுலாத்துறையை மேம்படுத்துவது இதன் பிரதான நோக்கமாகும்.

இக்கண்காட்சியின் போது இலங்கையின் இரத்தினக்கல் மற்றும் சுற்றுலாத்துறையை மேம்படுத்தும் வகையில் தயாரிக்கப்பட்ட சஃபாயர் ஸ்ரீலங்கா (Sapphire Sri Lanka) எனும் சிறப்பு காணொளி காட்சிபடுத்தப்படவுள்ளதாக பிரதமருக்கு தெரிவிக்கப்பட்டது.

 

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

எதிர்காலத்தில் இலங்கையுடன் தொடர்ந்து ஒத்துழைக்கத் தயார் – சீன ஜனாதிபதி

சீனாவிற்கு நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிற்கும் சீன ஜனாதிபதி சீ ஜின்பிங்விற்கும்...

பாடசாலை மாணவியை கடத்திய சந்தேக நபர்கள் ஜனவரி 27 வரை விளக்கமறியலில்

கடந்த 11 ஆம் திகதி கம்பளை, தவுலகல பகுதியில் பாடசாலை மாணவியை கடத்திச் சென்ற சம்பவத்தின் சந்தேக நபர்கள்...

14 நாட்களில் 2,352 டெங்கு நோயாளர்கள் பதிவு

நாட்டில் இவ்வருடத்தின் ஜனவரி மாதத்தின் முதல் 14 நாட்களில் 2,352 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தேசிய டெங்கு...