கிழக்கு உக்ரைனுக்கு படைகளை அனுப்ப ரஷ்யா உத்தரவிட்டதை அடுத்து மேற்கத்திய நாடுகள், ரஷ்யா மீது பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளன.
பிரிட்டன் ஐந்து வங்கிகள் மற்றும் மூன்று செல்வந்தர்கள் மீது பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளது.
ஜெர்மனி ரஷ்யாவிலிருந்து Nord Stream 2 என அழைக்கப்படும் ஒரு பெரிய எரிவாயு குழாய் திட்டத்தை நிறுத்தி வைத்துள்ளது.
ஐரோப்பிய ஒன்றியம் , ரஷ்யா ஐரோப்பிய ஒன்றியத்தின் மூலதனச்சந்தையை பயன்படுத்த முடியாது என தடை விதித்துள்ளது.
உக்ரேனின் கிழக்கு எல்லையில் ரஷ்யா தனது படைகளை நிறுத்தியிருப்பது ஆக்கிரமிப்பு நடவடிக்கைக்கான முன்னேற்பாட்டு நடவடிக்கை என அமெரிக்கா தெரிவித்துள்ளது.
உக்ரேனின் எல்லை நாடான துருக்கி ரஷ்யாவின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள அதே வேளை மேற்கு நாடுகள் ரஷ்யா மீது தடைகளை விதித்தமைக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
இதே வேளை உக்ரேனுக்கு இப்போதைக்கு துருப்புகளை அனுப்பும் எண்ணம் இல்லை ஆனால் அச்சுறுத்தல் ஏற்படும் பட்சத்தில் துருப்புகளை அனுப்பப்போவதாக ரஷ்யா தெரிவித்துள்ளது.
ரஷ்யாவின் நடவடிக்கைகள் நியாயமற்றவை என ஐரோப்பிய நாடுகளின் பாதுகாப்பு அமைச்சர்கள் தெரிவித்துள்ளனர். நாங்கள் எமது தாய் நாட்டிற்காக போராடி வருகிறோம் என களத்திலுள்ள ரஷ்ய சார்பு பிரிவினைவாத போராளி ஒருவர் தெரிவித்துள்ளார்.