தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கும் அனைத்து அரசியல் கட்சிகளின் செயலாளர்களுக்கும் இடையில் இன்று கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளது.
தேர்தல் சட்டங்கள் மற்றும் தேர்தல் முறைமைகளில் உரிய சீர்திருத்தங்களை கண்டறிந்து தேவையான திருத்தங்களை பரிந்துரைக்கும் விசேட பாராளுமன்ற தெரிவுக்குழுவிடம் முன்வைத்துள்ள யோசனைகளுக்கு அரசியல் கட்சிகளின் ஆதரவை ஆணைக்குழு இதன்போது பெற்றுக்கொள்ளும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் சட்டத்தரணி நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.
மேலும் மாகாண சபை மற்றும் உள்ளூராட்சி மன்ற தேர்தல்கள் தொடர்பிலும் கவனம் செலுத்தப்படும்.
சுகாதார வழிகாட்டுதல்களுக்கு இணங்க, எந்த சந்தர்ப்பத்திலும் தேர்தலை நடத்த ஆணையம் தயாராக இருப்பதாக தேர்தல் ஆணையத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.