துபாயில் தலைமறைவாகியுள்ளதாக சந்தேகிக்கப்படும் சலிது மல்ஷித என்ற போதைப்பொருள் கடத்தல்காரருக்கு உண்டியல் முறையில் 2 கோடி ரூபாவிற்கும் அதிக பணத்தை அனுப்ப முயன்ற சந்தேகநபர் ஒருவர் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினூடாக கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபரை பாணந்துறை நீதவான் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்திய போது, எதிர்வரும் 28 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டதாக பொலிஸார் கூறினர்.
வத்தளை – எந்தல பகுதியை சேர்ந்த ஒருவரே கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
பாணந்துறை குடா அருக்கொட பகுதியை சேர்ந்த , தற்போது துபாயில் தலைமறைவாகியுள்ளதாக சந்தேகிக்கப்படும் சலிது மல்ஷித என்ற போதைப்பொருள் கடத்தல்காரருக்கு சொந்தமான சொத்துகள் தொடர்பில், நிதி தூய்தாக்கல் சட்டத்தின் கீழ் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.