பர்கினா பாசோ (Burkina Faso) இலுள்ள தங்கச் சுரங்கமொன்றில் ஏற்பட்ட வெடிப்பில் சிக்குண்டு சுமார் 60 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Gaoua எனும் கிராமத்திற்கு அருகிலுள்ள தற்காலிக தங்க சுரங்கமொன்று இவ்வாறு வெடித்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
இந்த சம்பவத்தில் சிறுவர்கள் மற்றும் பெண்கள் உள்ளிட்ட பலர் காயமடைந்துள்ள நிலையில், வைத்தியசாலைகளின் அனுமதிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
தங்கத்தினை பதப்படுத்துவதற்காக குறித்த பகுதியில் சேமித்து வைக்கப்பட்டிருந்த வெடிபொருட்கள் வெடித்ததில் இந்த விபத்து சம்பவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
ஆபிரிக்க நாடுகள் சிலவற்றில் சுரங்கப் பணிகளை முன்னெடுப்பதன் காரணமாக இவ்வாறு விபத்துகள் அடிக்கடி பதிவு செய்யப்பட்டுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.