கொழும்பு 03 பிரதேசத்தில் 652 அறைகளுடன் கூடிய அதிசொகுசு ஹோட்டல் ஒன்றை நிர்மாணிப்பதற்காக திட்டமிட்டுள்ளது.
தம்ரோ கூட்டு வர்த்தகத்திற்குச் சொந்தமான டீ.ஆர். ஹோம் அப்லயன்சஸ் (பிரைவெட்) லிமிட்டட் நிறுவனம் மற்றும் பியெஸ்ரா (பிரைவெட்) லிமிட்டட் மற்றும் டீ.ஆர். இன்டஸ்ரீஸ் (பிரைவெட்) லிமிட்டட் போன்ற நிறுவனங்கள் கூட்டாக 70.4 மில்லியன் அமெரிக்க டொலர்கள் முதலீட்டில் ஹோட்டல் நிர்மாணிக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.
அதற்கமைய, முன்மொழியப்பட்டுள்ள கருத்திட்டத்தை மூலோபாயக் கருத்திட்டமாகக் கருத்தில் கொள்வதற்கும், மூலோபாய அபிவிருத்திக் கருத்திட்ட சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள குறித்த செயன்முறையை ஆரம்பிப்பதற்கும், மூலோபாய அபிவிருத்திக் கருத்திட்டத்தை வழங்குவதற்காக ஏற்புடைய விடுவிப்புக்கள்/ சலுகைகளைத் திட்டவட்டமாகக் குறிப்பிட்டு 2008 ஆம் ஆண்டு 14 ஆம் இலக்க மூலோபாய அபிவிருத்திக் கருத்திட்டங்களுக்கான சட்டத்தின் 3(2) ஆம் உறுப்புரையின் கீழ் வர்த்தமானி அறிவித்தலை வெளியிடுவதற்கும் பொருளாதாரக் கொள்கைகள் மற்றும் திட்ட அமுலாக்கல் அமைச்சராக பிரதமர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.