225 நாடாளுமன்ற உறுப்பினர்களில் 146 பேர் மட்டுமே கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசிகளைப் பெற்றுள்ளதாக தகவல் அறியும் உரிமை விண்ணப்பம் மூலம் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.
பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் திட்டம் 2021 பெப்பரி 16 ஆம் திகதி தொடங்கியது. எனினும் இப்போது வரை 146 எம்.பி.க்களுக்கு மட்டுமே தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக பாராளுமன்ற தகவல் அறியும் உரிமை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி 122 எம்.பி.க்கள் நாரஹேன்பிட்டி இராணுவ வைத்தியசாலையில் இந்தியாவின் ஆஸ்ட்ராசெனெகா தடுப்பூசியின் இரு டோஸ்களையும் பெற்றுள்ளனர்.
பாராளுமன்றத்தில் உள்ள சுகாதார மையத்தில் 24 எம்.பிக்களுக்கு ரஷ்யாவின் ஸ்புட்னிக் வி தடுப்பூசியின் இரு டோஸ்களையும் பெற்றுள்ளனர்.
இதுவரை கொவிட் -19 க்கு தடுப்பூசி போடாத எம்.பி.க்களின் விவரங்கள் மற்றும் காரணம் எங்களிடம் இல்லை என்று தகவல் அதிகாரியும் பாராளுமன்ற உதவி பொதுச்செயலாளருமான டிக்கிரி கே. ஜயதிலக கூறினார்.
இதேவேளை கடந்த 14 நாட்களில் ஐந்து எம்.பிக்களுக்கு கொவிட் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.