நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள் மற்றும் மின்சார நெருக்கடிக்கு தீர்வு காண்பதற்காக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் விசேட அமைச்சரவை கூட்டம் இன்று மாலை 5.00 மணிக்கு ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெறவுள்ளது.
மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் மற்றும் மத்திய வங்கியின் சிரேஷ்ட அதிகாரிகள், நிதியமைச்சின் செயலாளர் எஸ்.ஆர்.ஆட்டிகல மற்றும் மின்சக்தி அமைச்சுக்களின் செயலாளர்கள் ஆகியோரைக் கூட்டுவதற்கு நேற்று (21) இரவு நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
கொவிட் நெருக்கடி காரணமாக, கடந்த சில வாரங்களாக Zoom தொழில்நுட்பத்தில் அமைச்சரவைக் கூட்டங்கள் நடைபெற்றன. ஆனால் இன்றைய விசேட அமைச்சரவைக் கூட்டத்திற்கு அனைத்து அமைச்சர்களையும் ஜனாதிபதி செயலகத்திற்கு அழைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.