ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் இடையிலான சர்ச்சைக்குரிய சூழ்நிலையால் உலக சந்தையில் எரிபொருள் விலை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிழக்கு உக்ரைனின் டொனெட்ஸ்க் மற்றும் லுஹான்ஸ்க் ஆகிய இரண்டு பிராந்தியங்களை சுதந்திர நாடுகளாக அங்கீகரித்து ரஷ்ய ஜனாதிபதி நேற்று உத்தரவு பிறப்பித்ததை அடுத்து இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அமெரிக்க சந்தையில் ஒரு பீப்பாய் எரிபொருளின் விலை நேற்று மாலை வரை 3.22% அதிகரித்து $94 ஆக உயர்ந்துள்ளது.
இதேவேளை, பிரென்ட் எரிபொருள் சந்தையில், ஒரு பீப்பாய் எரிபொருளின் விலை 1.34% அதிகரித்துள்ளது. இதன்படி, ஒரு பீப்பாய் எரிபொருளின் விலை 96.73 அமெரிக்க டொலர்களாகும்.