இன்றைய தினமும் இரண்டு மணித்தியால மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என பொது பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
அதற்கமைய, மாலை 4.30 மணி தொடக்கம் இரவு 10.30 மணி வரையான காலப்பகுதியில் A, B, C ஆகிய பிரிவுகளில் 02 மணித்தியால மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.
இதனிடையே, தென் மாகாணம் மற்றும் துல்ஹிரிய, கேகாலை, அத்துருகிரிய ஆகிய பிரதேசங்களில் காலை 08.30 மணி முதல் 11.30 மணி வரையான காலப்பகுதிக்குள் 3 மணி நேர மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்துள்ளார்.