follow the truth

follow the truth

January, 16, 2025
Homeஉள்நாடுஉள்ளூர் தொழிற்றுறைகளில் முதலீடு செய்து நாட்டைக் கட்டியெழுப்ப இணையுங்கள்

உள்ளூர் தொழிற்றுறைகளில் முதலீடு செய்து நாட்டைக் கட்டியெழுப்ப இணையுங்கள்

Published on

உள்நாட்டுத் தொழிற்றுறைகளில் முதலீடுகளைச் செய்து, இந்நாட்டைக் கட்டியெழுப்ப ஒன்றிணையுமாறு, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உள்நாட்டுத் தொழில்முனைவோருக்கு அழைப்பு விடுத்துள்ளார்

பல்வேறு துறைகளைச் சேர்ந்த தொழில்முனைவோருடன் இன்று (21) ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே, ஜனாதிபதி அழைப்பு விடுத்துள்ளார்.

அபிவிருத்தி வேலைத்திட்டங்களுக்குத் தனியார்த் துறையினரின் பங்களிப்பைப் பெற்றுக்கொள்ளும் நோக்கத்தில் இந்தக் கலந்துரையாடல் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

அந்நியச் செலாவணியை உருவாக்குதல், அரச நிதிக் கொள்கை, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மேம்பாடு, முதலீடுகளை ஊக்குவித்தல், ஏற்றுமதியை மேம்படுத்தல், மீள்புதுப்பிக்கத்தக்க சக்திவலு, விவசாய உற்பத்திகள், போதுமானளவு பசளை விநியோகம், சுற்றுலாத்துறை அபிவிருத்தி உள்ளிட்ட பல துறைகள் தொடர்பிலான கலந்துரையாடல்கள் இடம்பெற்றன.

மீள்புதுப்பிக்கத்தக்க சக்திவலு, பசுமை விவசாயம், தொழில்நுட்பப் பூங்காக்கள், பசுமை இல்லங்கள் உள்ளிட்ட பல துறைகளுக்கான பாரியளவு முதலீட்டுடன் அந்நியச் செலாவணியை நிர்வகிக்கும் பாரிய சந்தர்ப்பம் கிட்டுமென்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.

இந்நாட்டைக் கட்டியெழுப்புவதற்கு உள்நாட்டுத் தொழில்முனைவோர் வழங்கிவரும் ஒத்துழைப்புகளுக்குப் பாராட்டுத் தெரிவித்த ஜனாதிபதி, உலகளாவிய தொற்றுப் பரவல் நிலைமைக்கு முகங்கொடுத்துக்கொண்டே பொருளாதாரத்தைக் கட்டியெழுப்ப இந்த அரசாங்கம் முயற்சித்து வரும் நிலையில், பலர் தமது குறுகிய நோக்கங்களை அடைவதற்காக முன்னெடுத்து வரும் தவறான எண்ணங்களை, வர்த்தகச் சமூகத்தினரால் மாத்திரமே சரிசெய்ய முடியுமென்றும் குறிப்பிட்டார்.

கடந்த இரண்டு வருடக் காலப்பகுதியில் நிர்மாணத் துறையில் ஏற்பட்ட மாற்றம் காரணமாக, சீமெந்துக்கான கேள்வி அதிகரித்துள்ளது. இதனால் சீமெந்துக்குப் பற்றாக்குறை நிலவியதெனத் தெரிவித்த அமைச்சர் பெசில் ராஜபக்ஷ, எதிர்காலத்தில் நாட்டுக்குள்ளேயே முழுமையான சீமெந்து உற்பத்தியை மேற்கொள்வதற்கு அரசாங்கம் அவதானம் செலுத்தியுள்ளது என்றும் குறிப்பிட்டார்.

அத்தியாவசியப் பொருட்களுக்கான தட்டுப்பாடுகள் எவையும் சந்தையில் காணப்படவில்லை என்று எடுத்துரைத்த அமைச்சர், மருந்துப்பொருட்கள் தவிர்ந்த பல பொருட்களுக்கான நிர்ணய விலையை நீக்குவதற்கு எடுக்கப்பட்ட தீர்மானத்தைக் கொண்டு தேவையற்ற பயன்களை அடைய முயற்சிக்க வேண்டாமென்று வர்த்தகர்களிடம் கோரிக்கை விடுத்தார்.

உயர்க்கல்விக்காக மாணவர்கள் வெளிநாடுகளுக்குச் செல்வதை முற்றாக நிறுத்தி, நாட்டுக்குள்ளேயே அந்தக் கல்வி வாய்ப்புகளை ஏற்படுத்துவதற்கான பொறிமுறையொன்றை தயாரிக்குமாறு, ஜனாதிபதி அவர்களிடம் தொழில்முனைவோர் கோரிக்கை விடுத்தனர்.

 

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

மன்னார் நீதிமன்றத்திற்கு முன்பாக துப்பாக்கிச் சூடு – மூவர் காயம்

மன்னார் நீதிமன்றத்திற்கு முன்பாக இன்று காலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் மூவர் காயமடைந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். மோட்டார்...

சட்டத்திற்கு இணங்க முச்சக்கர வண்டி மேலதிக உதிரிபாகங்கள் அகற்றப்படாது

முச்சக்கர வண்டிகளில் சட்டப்பூர்வமாகப் பொருத்தப்பட்ட மேலதிக உதிரிபாகங்களை அகற்றுவதைத் தடுப்பதற்கும், சட்டவிரோத மேலதிக பாகங்களை அகற்றுவதற்கும் இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது. பொலிஸ்...

சுமார் 1,000 கொள்கலன்கள் துறைமுகத்தில் தேக்கம்

சுமார் 1,100 கொள்கலன் தாங்கிப் பாரவூர்திகள் துறைமுகம் மற்றும் சுங்கத்தில் தேங்கியுள்ளதாக அகில இலங்கை கொள்கலன் போக்குவரத்து வாகன...