தனக்கு எதிராக சாட்சியமளித்தவர்களிடம் நட்டஈடு கோரி மேல்மாகாண முன்னாள் ஆளுநர் அசாத் சாலி தாக்கல் செய்த மனுவை அனுமதிப்பதா இல்லையா என்பது தொடர்பில் எதிர்வரும் மார்ச் 23ஆம் திகதி உத்தரவு பிறப்பிக்கப்படும் என கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று (21) தீர்ப்பளித்துள்ளது.
முன்னாள் ஆளுநர் அசாத் சாலி தனக்கு எதிராக நீதிமன்றத்தில் சாட்சியமளித்த, பாராளுமன்ற உறுப்பினர்களான மொஹமட் முஸம்மில், நிமால் பியதிஸ்ஸ மற்றும் காமினி வலேபொட ஆகியோரிடம் நட்டஈடு கோரி இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார்.