follow the truth

follow the truth

January, 16, 2025
Homeஉள்நாடுமுகக்கவசம் அணிவது தொடர்பிலான அறிவித்தல்

முகக்கவசம் அணிவது தொடர்பிலான அறிவித்தல்

Published on

முகக் கவசத்தை கழற்ற முடியுமென சுகாதார திணைக்களம் எவ்வித அறிவிப்பையும் வெளியிடவில்லையென சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்த்தன சுட்டிக்காட்டியுள்ளார்.

ஏதாவது ஒரு ஊடகத்தில் இது தொடர்பான தகவல் பதிவிடப்பட்டிருந்தால் அது உண்மைக்கு புறம்பானதென அவர் தெரிவித்தார்.

இலங்கை இன்னும் முகக்கவசம் அணிய வேண்டிய மட்டத்திலேயே உள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக்கொள்ளும் நடவடிக்கை தற்போது குறைந்த மட்டத்தில் காணப்படுவதாக சுகாதார பிரிவு தெரிவிக்கிறது. சுகாதார வழிமுறைகளைப் பின்பற்றி சகலரும் பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக்கொண்டால் தற்போது காணப்படும் சட்டத்தை தளர்த்த முடியுமென அவர் மேலும் தெரிவித்தார்.

இதேவேளை, நாட்டில் ஒமிக்ரோன் திரிபு பரவி வருகிறது. வீட்டிலிருந்து வெளியில் வரும் போது தயவு செய்து முகக் கவசத்தை அணிந்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சுகாதார திணைக்களமோ, சுகாதார பிரிவோ இதுவரை முகக் கவசத்தை கழற்ற வேண்டுமென்ற தீர்மானத்திற்கு வரவில்லையென சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்த்தன சுட்டிக்காட்டியுள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஜனாதிபதியின் சீன விஜயத்தின் பலனாக 3.7 பில்லியன் டொலர் வெளிநாட்டு நேரடி முதலீடு

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தின் போது இலங்கைக்கு கிடைத்த பாரிய முதலீட்டை குறிக்கும்...

42 வினாடிகளில் விற்கப்பட்ட ரயில் டிக்கெட் – 2,000 ரூபா டிக்கெட் 16,000 ரூபாவுக்கு விற்பனை

மலையக ரயில் மார்க்கத்தின் எல்ல செல்லும் ரயில் பயணச்சீட்டுக்கள் இணையதளத்தில் வெளியிடப்பட்ட 42 வினாடிகளுக்குள் அனைத்து பயணச்சீட்டுக்களும் தீர்ந்துவிட்டதால்,...

இலங்கையில் முதலீடு செய்ய வருமாறு சீன முதலீட்டாளர்களுக்கு ஜனாதிபதி அழைப்பு

நிலையான, வலுவான ஆட்சி மற்றும் வெளிப்படைத்தன்மையுள்ள பொருளாதாரத்தைக் கொண்ட இலங்கையில் முதலீடு செய்ய வருமாறு சீன முதலீட்டாளர்களுக்கு ஜனாதிபதி...