இலங்கை போக்குவரத்து சபை பஸ் வண்டிகள் மற்றும் தனியார் பஸ் வண்டிகளுக்கிடையில் ஏற்படும் மோதல் நிலையை தவிர்ப்பதற்காக GPS தொழில்நுட்பத்தை பயன்படுத்தி கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபையின் தலைவர் கிங்ஸ்லி ரணவக்க தெரிவித்துள்ளார்.
பொதுமக்களுக்கு பாதுகாப்பான சேவையை வழங்குவதே தமது நோக்கமெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த சில தினங்களில் போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ்களும், தனியார் பஸ்களும் போட்டித்தன்மையுடன் சேவையில் ஈடுபட்டதால் பல்வேறு பிரச்சினைகள் ஏற்பட்டன.
இரு பஸ்களும் ஒரே நேரத்தில் சேவையில் ஈடுபடும் போது பொதுமக்களும் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகங்கொடுக்கின்றனர். இந்நிலையில் GPS தொழில்நுட்பத்தை பயன்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் அரசாங்கத்தின் உரிய பிரிவுகளுக்கும், அமைச்சுக்களுக்கும் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், விரைவில் உரிய தீர்வொன்றும் கிடைக்குமென்று எதிர்பார்ப்பதாக இலங்கை போக்குவரத்து சபையின் தலைவர் கிங்ஸ்லி ரணவக்க தெரிவித்துள்ளார்.