இளைஞர்களுக்கான சிறந்த பிரதிநிதித்துவத்தை உறுதிசெய்யும் வகையில் கலப்பு தேர்தல் முறைக்கான புதிய சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்படும் எனவும் இதனை தெடர்ந்து உள்ளூராட்சி தேர்தல் நடைபெறும் எனவும் கல்வி அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.
தனது தலைமையிலான தேர்தல் சீர்திருத்தங்கள் தொடர்பான நாடாளுமன்ற தெரிவுக்குழு தேர்தல் சீர்திருத்தங்களை உருவாக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது என அவர் சுட்டிக்காட்டினார்.
இந்த நடவடிக்கைகள் நிறைவுபெற்றதும் உள்ளூராட்சித் தேர்தலை நடத்துவது குறித்து பரிசீலிக்க முடியும் என அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.