நாளைய தினம் (21) தென் மாகாணத்தில் மாத்திரம் ஒன்றரை மணிநேர மின் விநியோகத் தடை அமுல்படுத்தப்படவுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்தாா்.
இதன்போது, நாளை நாடளாவிய ரீதியில் இந்த மின்வெட்டு அமுலாகாது என்றும் தேவையான எரிபொருள் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தாா்.
இதன்படி, தென் மாகாணத்தில் மேற்கொள்ளப்படவுள்ள மின்வெட்டு தொடர்பான நேரம் நாளை பிற்பகல் 12 மணிக்கு முன்னர் அறிவிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.