பதுளை, எல்ல பிரதேசத்தில் சுற்றுலா விடுதி ஒன்றின் இரண்டாவது மாடியில் இருந்து தவறி வீழ்ந்து வெளிநாட்டு சுற்றுலா பயணி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
செக் குடியரசைச் சேர்ந்த குறித்த நபர், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
நேற்று (19) இரவு குறித்த விடுதியில் உல்லாசமாக இருந்த போது கீழே விழுந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பில் எல்ல பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.