உடபுஸ்ஸலாவ பகுதியில் நேற்று மாலை ஏற்பட்ட தீ விபத்து காரணமாக 5 கடைகள் முற்றாக எரிந்து நாசமாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.
இத் தீ விபத்தில் எவருக்கும் உயிராபத்தோ, காயங்களோ ஏற்படவில்லை என்றும் பொருட்கள் முற்றாக எரிந்து நாசமாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.
தீ ஏற்பட்டதற்கான காரணம் கண்டறியப்படவில்லை என்றும் யாராவது தீ வைத்திருக்கலாம் எனவும் சந்தேகிக்கப்படுகின்றது.
ஏற்பட்ட தீ காரணம் தொடர்பாகவும், சேதவிபரங்கள் தொடர்பாகவும் உடபுஸ்ஸலாவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.