follow the truth

follow the truth

January, 15, 2025
Homeஉள்நாடுநாட்டின் சில பகுதிகளில் 100 மில்லிமீட்டருக்கும் அதிக மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும்

நாட்டின் சில பகுதிகளில் 100 மில்லிமீட்டருக்கும் அதிக மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும்

Published on

நாட்டின் சில பகுதிகளில் 100 மில்லிமீட்டருக்கும் அதிக மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

நாட்டின் கிழக்கு பகுதியில் வலுவான மேகக் கூட்டங்கள் உருவாகியுள்ளதால் கிழக்கு, ஊவா மாகாணங்களிலும் , மாத்தளை பொலன்னறுவை மாவட்டங்களிலும் 100 மில்லிமீட்டருக்கும் அதிகமான மழைவீழ்ச்சியை எதிர்பார்ப்பதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

தென்கிழக்கு மற்றும் கிழக்கு கடற்பகுதிகளுக்கு மேலாக உருவாகியுள்ள முகில்கூட்டங்களால், திருகோணமலை தொடக்கம் பொத்துவில் ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கடற்பிராந்தியத்தில் மழை அல்லது இடியுடன் கூடிய பலத்த மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.

நாட்டின் சில பகுதிகளில் பலத்த மழைவீழ்ச்சி பதிவாகும் என்பதுடன், மணிக்கு 70-80 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

கடலலைகளின் வேகம் அதிகரிப்பதுடன், அலை உயரமும் அதிகரிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் தென்கிழக்கு மற்றும் கிழக்கு கடற்பிராந்தியங்களில் கடற்றொழிலில் ஈடுபடும் போது, மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

கடந்த ஆண்டில் நாட்டின் மொத்த சுற்றுலாத்துறை வருமானம் 53.2% ஆக அதிகரிப்பு

2024 ஆம் ஆண்டில் நாட்டின் மொத்த சுற்றுலாத்துறை வருமானம் 53.2% அதிகரித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி குறிப்பிட்டுள்ளது. 2023 ஆம்...

வடக்கின் கடற்றொழில் பிரச்சினை தொடர்பான விசேட கலந்துரையாடலுக்கு தமிழகத்தின் இணக்கம்

வடமாகாண மீனவர் பிரதிநிதிகளும், தமிழக முதலமைச்சர் எம். கே. ஸ்டாலின் இடையே பேச்சுவார்த்தை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. வடக்கின் மீனவப் பிரச்சினை...

வெலே சுதா உட்பட மூவருக்கு கடூழிய சிறை

போதைப்பொருள் கடத்தல்காரர் எனக் கூறப்படும் கம்பொல விதானலாகே சமந்த குமார எனப்படும் வெலே சுதா, அவரது மனைவி மற்றும்...