கட்டுமானப் பொருட்கள் கூட்டுத்தாபனத்தினால் சலுகை விலையில் சீமெந்து இறக்குமதி செய்வதற்கான கடனுதவி வழங்கும் நடவடிக்கை அடுத்த வாரத்தில் நடைமுறைப்படுத்தப்படும் என நிர்மாண மற்றும் கட்டுமானப் பொருட்கள் கைத்தொழில் ஊக்குவிப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
இரண்டு வாரங்களுக்குள் கட்டுமானப் பொருட்கள் கூட்டுத்தாபனத்தின் ஊடாக சலுகை விலையில் சீமெந்து விநியோகத்தை மேற்கொள்ள முடியும் என அதன் செயலாளர் கீர்த்தி ரஞ்சித் அபேசிறிகுணவர்தன தெரிவித்துள்ளார்.