இரண்டு இராஜாங்க அமைச்சுகளுக்கு இரண்டு புதிய செயலாளர்களை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நியமித்துள்ளார்.
இதன்படி, கிராமிய வயல்கள் மற்றும் அது சார்ந்த குளங்கள், நீர்த்தேக்கங்கள் மற்றும் நீர்ப்பாசன அபிவிருத்தி இராஜாங்க அமைச்சின் புதிய செயலாளராக கே.ஜீ.விஜேசிறி நியமிக்கப்பட்டுள்ளார்.
கரும்பு, சோளம், மரமுந்திரிகை, மிளகு, கறுவா, கராம்பு, வெற்றிலை உள்ளிட்ட சிறு தோட்டப் பயிர்ச் செய்கை அபிவிருத்தி, அவை சார்ந்த தொழில்கள் மற்றும் ஏற்றுமதி மேம்பாட்டு இராஜாங்க அமைச்சின் புதிய செயலாளராக எஸ்.டீ.பாடிகோரால நியமிக்கப்பட்டுள்ளார்.
இன்று (18) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து, ஜனாதிபதியிடமிருந்து புதிய செயலாளர்கள் தமக்கான நியமனக் கடிதங்களைப் பெற்றுக்கொண்டனர்.