அவுஸ்திரேலியாவுக்கு எதிரான டி – 20 போட்டியில் நுவான் துஷாராவுக்கு உடல் உபாதை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் அவர் சிகிச்சை பெற்று வருவதாகவும் அவுஸ்திரேலியாவுடனான நாளை இடம்பெறவுள்ள போட்டியில் அவர் விளையாடமாட்டார் என இலங்கை கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது.
இதேவேளை சகலதுறை வீரர் ரமேஷ் மெண்டிஸும் பயிற்சியின் போது காயமடைந்துள்ளார். அவரது வலது பெருவிரலில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதால் ஓய்வெடுக்குமாறு வைத்தியர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
இந்நிலையில், இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர் நுவான் துஷார அவுஸ்திரேலியாவுக்கு எதிரான இறுதி இரண்டு டி20 போட்டிகளில் விளையாட முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்.