வாரத்தில் நான்கு நாள் வேலை திட்டத்தை அமல்படுத்த உள்ளதாக பெல்ஜியம் அறிவித்துள்ளது.
கடந்த வருடம் ஐரோப்பிய நாடான ஸ்காட்லாந்து, சோதனை அடிப்படையில் வாரத்தில் நான்கு நாள் வேலை திட்டத்தை அறிவித்ததை தொடர்ந்து ஐஸ்லாந்து, ஸ்பெயின், ஜப்பான் ஆகிய நாடுகளும் சோதனை அடிப்படையில் நான்கு நாள் வேலை திட்டத்தை அறிவித்தன.
எனினும், மேற்காசிய நாடான ஐக்கிய அரபு எமிரேட்ஸ் தான், முதன் முதலாக, நான்கு நாள் வேலையை அதிகாரப்பூர்வமாக அமுல்படுத்தியுள்ளது.
இதற்கமைய வாரத்தில் 04 நாட்கள் மாத்திரமே பணி நாட்களாக இருக்கும் என்பதற்கான சட்ட வரைவிற்கு பெல்ஜியம் அரசு இணங்கியுள்ளது.
கொரோனா வைரஸ் தொற்றுக்கு பின்னர் தொழிலாளர் நலன் சார்ந்த சட்டங்களில் பல மாற்றங்களை கொண்டுவரவேண்டிய தருணம் வந்துவிட்டதாக பிரதமர் அலெக்சாண்டர் டீ க்ரூ (Alexander De Croo) தெரிவித்துள்ளார்.