அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் விசேட மத்திய குழுக் கூட்டம் இன்று நடைபெறவுள்ளதாக அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் துணைச் செயலாளர் வைத்தியர் நவீன் டி சொய்சா தெரிவித்துள்ளார்
சுகாதாரத்துறையில் எழுந்துள்ள பிரச்சினைகள் தொடர்பிலும், எதிர்காலத்தில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து கலந்துரையாடுவதே இந்த சந்திப்பின் நோக்கம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
குறிப்பாக சுகாதாரத்துறையில் நிலவும் சம்பள முரண்பாடுகள் தொடர்பில் விரிவாக ஆராயப்படவுள்ளதாக வைத்தியர் நவீன் டி சொய்சா தெரிவித்துள்ளார்.