follow the truth

follow the truth

September, 8, 2024
Homeஉள்நாடுகுவைத் அரசின் நிதியுதவியுடன் 66 பாலங்களை புணரமைக்க நடவடிக்கை!

குவைத் அரசின் நிதியுதவியுடன் 66 பாலங்களை புணரமைக்க நடவடிக்கை!

Published on

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் “சுபீட்சத்தின் நோக்கு” கொள்கை திட்டத்தின்கீழ் மக்களின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் நோக்குடன் நாட்டின் ஏழு மாகாணங்களை உள்ளடக்கிய 66 பாலங்களை புணரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என ஆளும் தரப்பு பிரதம கொறடா, அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

இந்த 66 பாலங்களை புணரமைக்கும் திட்டத்திற்கு குவைத் அரசு நிதியுதவி வழங்குகிறது. இந்த 66 பாலங்களும் 03 வருடங்களுக்குள் புணரமைக்கப்படவுள்ளது.

வெள்ளம் மற்றும் மண்சரிவு ஏற்பட்டால் நாடு பூராகவும் உள்ள வீதி வலையமைப்பிற்கு பாதுகாப்பான போக்குவரத்து வசதிகளை வழங்கும் வகையில் தற்காலிக பாலங்கள் அமைக்கப்படும் எனவும் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ மேலும் தெரிவித்தார்.

மேலும் , தேவையான பாலங்களின் விபரங்கள் தயாரிக்கப்படவுள்ளதாகவும் எதிர்காலத்தில் கட்டம் கட்டமாக அதற்கான நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

செப்டம்பர் 05 நாட்களில் மாத்திரம் 21,073 சுற்றுலாப் பயணிகள் வருகை

செப்டம்பர் மாதத்தின் கடந்த ஐந்து நாட்களில் மாத்திரம் 21,073 பேர் நாட்டுக்கு வருகை தந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார...

இலங்கைக்கான விசா கட்டுப்பாடுகளை நீக்கிய தன்சானியா

20 ஆண்டுகளுக்கும் மேலாக விதிக்கப்பட்டிருந்த இலங்கைக்கான விசா கட்டுப்பாடுகளை தன்சானியா நீக்க தீர்மானித்துள்ளது. தன்சானியாவின் விசா பரிந்துரை பட்டியலில் இலங்கை...

தபால்மூல வாக்குச் சீட்டின் புகைப்படத்தை வெளியிட்ட நபர் தொடர்பில் விசாரணை

தபால் மூல வாக்கு சீட்டினை சமூக ஊடகங்களில் வெளியிட்டதாகக் கூறப்படும் சந்தேக நபரை விசாரணை செய்யுமாறு தேர்தல்கள் ஆணைக்குழு...