காலில் ஏற்பட்ட காயத்துடன் நேற்று வயலில் இருந்து கொண்டுவரப்பட்டு சிகிச்சை வழங்கப்பட்ட குட்டி யானை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக நிக்கவெரட்டிய வனவிலங்கு கால்நடை வைத்திய பிரிவு தெரிவித்துள்ளது.
மூன்றரை வயதும் நான்கு அடி உயரமும் கொண்ட குறித்த யானைக் குட்டி, கல்கமுவ பிரதேசத்தில் வயல்வெளியில் சிக்கித் தவித்த நிலையில், மேலதிக சிகிச்சைக்காக நிக்கவெரட்டிய வனவிலங்கு கால்நடை மருத்துவப் பிரிவுக்கு அழைத்துச் செல்லப்பட்டது.
குட்டி யானையின் மரணம் தொடர்பான பிரேத பரிசோதனை நிக்கவெரட்டிய வனவிலங்கு கால்நடை வைத்திய பிரிவில் வனவிலங்கு கால்நடை வைத்தியர் இசுரு ஹேவாகோட்டகே தலைமையில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.