உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் உயிரிழந்தவர்களின் உறவினர்கள், காயமடைந்தவர்களுக்கு இழப்பீடு பெற்றுத்தருமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட அனைத்து வழக்குகளையும் இரத்து செய்து, தன்னை அனைத்து குற்றச்சாட்டுகளில் இருந்தும் விடுவிக்குமாறு கோரி முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தாக்கல் செய்துள்ள மேன்முறையீட்டு மனுவை மார்ச் 09 திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ள கொழும்பு சிவில் மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது.
பிரதிவாதிகளாக பெயரிடப்பட்டுள்ள பாதிக்கப்பட்டவர்களுக்கு அறிவிப்பு கிடைக்கவில்லையென தெரியவந்தமையினாலேயே மனு மீதான விசாரணை பிற்போடப்பட்டது.