follow the truth

follow the truth

January, 16, 2025
Homeஉள்நாடுமஹாபொல புலமைப்பரிசில் நம்பிக்கைப் பொறுப்பு சட்டம் நடைமுறைக்கு

மஹாபொல புலமைப்பரிசில் நம்பிக்கைப் பொறுப்பு சட்டம் நடைமுறைக்கு

Published on

மஹாபொல உயர் கல்விப் புலமைப்பரிசில் நம்பிக்கைப்பொறுப்பு நிதியம் (திருத்தச்) சட்டமூலத்தில் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன நேற்று(14) தனது கையொப்பத்தையிட்டு சான்றுரைப்படுத்தினார்.

கடந்த 08ஆம் திகதி இந்தச் சட்டமூலம் பாராளுமன்றத்தில் விவாத்துக்கு எடுத்துக் கொள்ளப்பட்டதுடன், திருத்தங்களுடன் இது நிறைவேற்றப்பட்டிருந்தது.

இதன் ஊடாக 1981ஆம் ஆண்டு 66ஆம் இலக்க மஹாபொல உயர் கல்விப் புலமைப்பரிசில் நம்பிக்கைப் பொறுப்பு நிதியச் சட்டம் லலித் அத்துலத்முதலி மஹாபொல உயர்கல்விப் புலமைப்பரிசில் நம்பிக்கைப் பொறுப்பு நிதியச் சட்டம் எனப் பெயர் மாற்றம் பெறுவது உள்ளிட்ட திருத்தங்களுக்கு உள்ளாகிறது.

இதற்கமைய 2022ஆம் ஆண்டு 01ஆம் இலக்க மஹாபொல உயர் கல்விப் புலமைப்பரிசில் நம்பிக்கைப் பொறுப்பு (திருத்தச்) சட்டம் நேற்று (14) முதல் நடைமுறைக்கு வருகிறது

 

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

எதிர்காலத்தில் இலங்கையுடன் தொடர்ந்து ஒத்துழைக்கத் தயார் – சீன ஜனாதிபதி

சீனாவிற்கு நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிற்கும் சீன ஜனாதிபதி சீ ஜின்பிங்விற்கும்...

பாடசாலை மாணவியை கடத்திய சந்தேக நபர்கள் ஜனவரி 27 வரை விளக்கமறியலில்

கடந்த 11 ஆம் திகதி கம்பளை, தவுலகல பகுதியில் பாடசாலை மாணவியை கடத்திச் சென்ற சம்பவத்தின் சந்தேக நபர்கள்...

14 நாட்களில் 2,352 டெங்கு நோயாளர்கள் பதிவு

நாட்டில் இவ்வருடத்தின் ஜனவரி மாதத்தின் முதல் 14 நாட்களில் 2,352 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தேசிய டெங்கு...