இவ்வருட வரவு செலவுத் திட்டத்தில் குறைந்த வருமானம் பெறுவோருக்கு உத்தேச வீட்டுப் பொருளாதாரப் பாதுகாப்பு (நிவாரணப் பொதி) திட்டத்தின் கீழ் 2000 ரூபா பெறுமதியான நிவாரணப் பொதியை வழங்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
இதன்படி, குறைந்த வருமானம் கொண்ட 40 குடும்பங்களுக்கு, 2,000 ரூபா பெறுமதியான பொருட்களை கொள்வனவு செய்வதற்கான இலத்திரனியல் அட்டையொன்றை வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
குறித்த டிஜிட்டல் அட்டையைப் பயன்படுத்தி வீட்டுமட்டப் பொருளாதார அபிவிருத்தி தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் நடைமுறைப்படுத்தப்பட்ட பெண் தொழில் முயற்சியாளர்களை அடிப்படையாகக் கொண்ட சிறியளவிலான பல்பொருள் விற்பனை நிலையங்கள் மூலமாக உள்ளுரில் உற்பத்தி செய்யப்படும் அத்தியாவசிய உணவுப் பொருட்கள் மற்றும் ஏனைய நுகர்வுப் பொருட்களைக் கொள்வனவு செய்வதற்கு வாய்ப்புக் கிடைக்கும்.
அதற்கமைய, குறித்த வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக வர்த்தக அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.