இலங்கை மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையிலான மூன்றாவது இருபதுக்கு20 போட்டியில் இலங்கை அணி அவுஸ்திரேலிய அணிக்கு 122 ஓட்டங்களை வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது.
போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற அவுஸ்திரேலிய அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது.
இதற்கமைய, முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 06 விக்கெட்டுக்களை இழந்து 121 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.
இந்நிலையில், அவுஸ்திரேலிய அணி 122 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாட தயாராக உள்ளது.