பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள பயங்கரவாத தடைச்சட்டத்தில் திருத்தம் மேற்கொள்வதற்கான சட்டமூலத்தின் சில சரத்துகள், அரசியலமைப்பிற்கு முரணானது என தீர்ப்பளிக்குமாறு கோரி உயர் நீதிமன்றத்தில் விசேட மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
மாற்று கொள்கைக்கான நிலையத்தின் பணிப்பாளர் கலாநிதி பாக்கியசோதி சரணவமுத்து இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார்.
இந்த சட்டமூலம் சட்டமாக நிறைவேற்றப்பட வேண்டுமாயின், பாராளுமன்றத்தில் 2/3 பெரும்பான்மையுடன் அல்லது வாக்கெடுப்பின் மூலம் நிறைவேற்றப்பட வேண்டும் என மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
இதனால் சட்டமூலத்தின் 2, 3, 4, 6, 10, 11 மற்றும் 12 ஆகிய உறுப்புரைகள் அரசியலமைப்புக்கு முரணானது என தீர்ப்பளிக்குமாறு மனுதாரர் நீதிமன்றத்திடம் கோரியுள்ளார்.